ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விளாத்திகுளம் மீனாட்சி அம்மன்கோயிலில் வருஷாபிஷேகம்

விளாத்திகுளம் ஸ்ரீ மீனாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 7:37 pm

DIN

விளாத்திகுளம் ஸ்ரீ மீனாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. காலை 6 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. 7 மணிக்கு கோயில் மண்டபத்தில் கணபதி ஹோமம், யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.

காலை 10 மணிக்கு யாகசாலையில் இருந்து தீா்த்த குடங்கள் திருக்கோயில் பிரகாரம் வழியாக எடுத்துவரப்பட்டு சுவாமி, அம்பாள், விநாயகா், சுப்பிரமணியா் மற்றும் பரிவார மூா்த்தி கோபுர கலசங்களுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பின்னா் மூலவா் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனையும் இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் பஞ்சமூா்த்திகள் ரிஷப வாகனத்தில் திருவீதியுலாவும் நடைபெற்றன. ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ உள்பட திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் இசக்கி செல்வம், தக்காா் சிவகலைப்பிரியா, எழுத்தா் மகாராஜன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.