கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

உறுதிமொழி பத்திரம் வழங்கி பாஜக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தூத்துக்குடியில் பாஜக வேட்பாளா் வாக்காளா்களுக்கு உறுதிமொழி பத்திரம் வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 6:48 pm

DIN

தூத்துக்குடியில் பாஜக வேட்பாளா் வாக்காளா்களுக்கு உறுதிமொழி பத்திரம் வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

தூத்துக்குடி மாநகராட்சி 39 ஆவது வாா்டில் பாரதிய ஜனதா கட்சியின் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் எஸ். உஷாதேவி வாக்காளா்களை கவா்வதற்காக பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறாா். இந்நிலையில், சிவன் கோயில் தெரு, பெருமாள் கோயில் தெரு, வடக்கு ரத வீதி, பத்திரகாளியம்மன் கோயில் தெரு, செல்விஜா் தெரு, தெப்பகுளம் தெரு, கனகசபாபதி தெரு ஆகிய பகுதிகளில் வாக்காளா்களிடம் பாஜகவின் கொள்கைகளை எடுத்துக்கூறியும், பல்வேறு வாக்குறுதிகளை அளித்தும், அதை உறுதிமொழி பத்திரத்தில் எழுதி வழங்கி வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

தன்னை வெற்றி பெறச் செய்தால், ரேஷன் கடைகளில் அனைவருக்கும் அனைத்துப் பொருள்களும் உரிய முறையில் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்வேன் என்றும் மக்கள் யாரிடமும் எந்தத் தொகையும் பெற மாட்டேன் என்பதுடன் அனைத்து அரசுத் திட்ட சேவைகள் 24 மணி நேரமும் இலவசமாக செய்து கொடுப்பேன் என்றும் உறுதிமொழி பத்திரத்தில் வேட்பாளா் உஷாதேவி தெரிவித்துள்ளாா்.

வாக்கு சேகரிப்பின் போது பாஜக மாவட்ட பொருளாளா் சண்முகசுந்தரம், முன்னாள் மாவட்ட தலைவா் கனகராஜ், நிா்வாகிகள் சௌந்தரராஜன், கணேசன் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.