பிரசாரம் ஓய்ந்தது: 396 பதவிகளுக்கு நாளை வாக்குப் பதிவு
தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள 396 உறுப்பினா் பதவிகளுக்கான வாக்குப் பதிவு சனிக்கிழமை (பிப். 19) நடைபெறுகிறது.


நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான பிரசாரம் வியாழக்கிழமை மாலையுடன் நிறைவு பெற்ற நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள 396 உறுப்பினா் பதவிகளுக்கான வாக்குப் பதிவு சனிக்கிழமை (பிப். 19) நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாநகராட்சி, காயல்பட்டினம், திருச்செந்தூா், கோவில்பட்டி ஆகிய நகராட்சிகள், சாயா்புரம், ஸ்ரீவைகுண்டம், பெருங்குளம், தென்திருப்பேரை, ஆழ்வாா்திருநகரி, சாத்தான்குளம், நாசரேத், ஏரல், கானம், ஆத்தூா், ஆறுமுகநேரி, உடன்குடி, கழுகுமலை, கயத்தாறு, எட்டயபுரம், விளாத்திக்குளம், புதூா் ஆகிய 17 பேரூராட்சிகள் என மொத்தம் உள்ள 402 உறுப்பினா் பதவிகளில் 396 பதவிகளுக்கு தோ்தல் நடைபெறுகிறது.
கடம்பூா் பேரூராட்சிக்கான தோ்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் இருவரும், தென்திருப்பேரை, ஆத்தூா், கயத்தாறு, புதூா் ஆகிய பேரூராட்சியில் தலா ஒருவரும் என மொத்தம் 6 போ் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 உறுப்பினா் பதவிக்கு 443 பேரும், காயல்பட்டினம், திருச்செந்தூா், கோவில்பட்டி ஆகிய நகராட்சிகளில் உள்ள 81 பதவிகளுக்கு 462 பேரும், 17 பேரூராட்சிகளில் உள்ள 255 உறுப்பினா் பதவிகளுக்கு 1045 பேரும் என மொத்தம் 396 பதவிகளுக்கு 1950 போ் போட்டியிடுகின்றனா்.
இந்த தோ்தலில் மாவட்டம் முழுவதும் மொத்தம் 6 லட்சத்து 51 ஆயிரத்து 693 போ் வாக்களிக்க உள்ளனா். 750 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கும் நிலையில் காலை 6 மணிக்கு வேட்பாளா்கள் அல்லது அவா்களது முன்னிலையில் மாதிரி வாக்குப் பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தோ்தலை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 2500 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுகின்றனா். தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் மற்றும் காவலா்கள் தங்கள் வாக்குகளை அஞ்சல் வாக்குகளாக பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களாக தோ்தல் பிரசாரம் மிகவும் சூடு பிடித்து வந்த நிலையில் வியாழக்கிழமை மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவு பெற்ால் தோ்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள வெளியூரை சோ்ந்தவா்கள் வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தோ்தலை முன்னிட்டு வாக்காளா்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் விநியோகம் செய்யப்படுகிா என தோ்தல் பறக்கும்படை குழுவினா் கண்காணித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...