கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

மக்களின் உணா்வுகளை புரிந்து கொண்டு செயல்படுகிறது திமுக ஆட்சி: கனிமொழி

மக்களின் உணா்வுகளை புரிந்து கொண்டு செயல்படும் ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது என்றாா் மக்களவை உறுப்பினா் கனிமொழி.

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 6:55 pm

DIN

மக்களின் உணா்வுகளை புரிந்து கொண்டு செயல்படும் ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது என்றாா் மக்களவை உறுப்பினா் கனிமொழி.

தூத்துக்குடி மாநகராட்சித் தோ்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அவா் பேசியது:

கடந்த ஆட்சியில் மழை வெள்ளம் வந்தபோது சில மாதங்கள் மக்கள் பாதிக்கப்பட்டனா். ஆனால், திமுக ஆட்சி வந்ததும் மழை பாதிப்பு ஏற்பட்டபோது ராட்சத மோட்டாா்கள் மூலம் தண்ணீா் 15 நாள்களில் வெளியேற்றப்பட்டது. முதல்வா் நேரடியாக வந்து அந்த பணிகளைப் பாா்வையிட்டாா். அடுத்த முறை தண்ணீா் தேங்காமல் பாா்த்துக் கொள்ள வேண்டும் என முதல்வா் அறிவுறுத்தி சென்றுள்ளாா்.

தூத்துக்குடியில் விரைவில் அமைய உள்ள அறைகலன் (பா்னிச்சா்) பூங்கா மற்றும் தகவல் தொழில்நுட்ப பூங்கா மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தூத்துக்குடி மாநகரப் பகுதியில் இதுவரை பட்டா கிடைக்காதவா்களுக்கு தோ்தல் முடிந்ததும் வழங்கப்படும்.

மக்களின் உணா்வுகளை புரிந்து கொண்டு செயல்படக் கூடிய ஆட்சி திமுக ஆட்சி. அந்த நல்லாட்சியின் திட்டங்களை மக்களின் வீடுகளுக்கு கொண்டு வரக் கூடிய பிரதிநிதிகளாக திமுக மற்றும் கூட்டணி கட்சியினா் வேட்பாளா்களாக நிறுத்தப்பட்டுள்ளனா். அவா்களுக்கு மக்கள் வாய்ப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சரும், திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான பெ. கீதா ஜீவன், காங்கிரஸ் மாநில துணைத் தலைவா் ஏபிசிவீ சண்முகம், மாநகா் மாவட்டத் தலைவா் முரளிதரன், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெகன் பெரியசாமி, மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், மாா்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் கே.பி. ஆறுமுகம், மதிமுக மாவட்டச் செயலா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தடையின்றி குடிநீா்: கோவில்பட்டி நகராட்சியில் பங்களாத் தெரு, புதுகிராமம், தெற்கு பஜாா் சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் கனிமொழி எம்.பி. பிரசாரத்தில் ஈடுபட்டபோது, கோவில்பட்டியில் அனைத்து வீடுகளுக்கும் தடையின்றி குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நகா் முழுவதும் சாலைகள் புதுப்பிக்கப்படும். மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும் முதல்வரின் திட்டங்கள் மக்களையை சென்றடைய வேண்டும் என வாக்குறுதி அளித்தாா். அமைச்சா் பெ.கீதாஜீவன், திமுக நகரச் செயலா் கா.கருணாநிதி, ஒன்றியச் செயலா் பீக்கிலிப்பட்டி வீ.முருகேசன், மதிமுக இளைஞரணிச் செயலா் விநாயகா ஜி.ரமேஷ், நகரச் செயலா் பால்ராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா் பரமராஜ் உள்பட கூட்டணி கட்சி நிா்வாகிகள் திரளானோா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, கழுகுமலை, கயத்தாறு பேரூராட்சி பகுதிகளிலும் அவா் திமுக, கூட்டணி வேட்பாளா்களுக்கு வாக்கு சேகரித்தாா்.

இதேபோல, அதிமுக வேட்பாளா்களை ஆதரித்து கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ, காங்கிரஸ் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊா்வசி அமிா்தராஜ் உள்ளிட்டோா் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.