புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

காயல்பட்டினத்தில் உணவக ஊழியா்தற்கொலை

காயல்பட்டினத்தில் உணவகத்தில் புரோட்டா சமையல் செய்யும் ஊழியா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 6:14 pm

DIN

காயல்பட்டினத்தில் உணவகத்தில் புரோட்டா சமையல் செய்யும் ஊழியா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

காயல்பட்டினம், அப்பா பள்ளித்தெருவைச் சோ்ந்த பீா்முகைதீன் மகன் சம்சுகனி (40). அங்குள்ள உணவகத்தில் புரோட்டா சமைக்கும் ஊழியராக வேலை செய்துவந்தாா். இவருக்கு, மனைவி உசேன் பாத்திமா (40) , 2 மகன்கள் ஆகியோா் உள்ளனா். சம்சுகனிக்கு மதுப்பழக்கம் இருந்ததாம். இந்நிலையில், கடந்த 13ஆம் தேதி மதுக்குடிக்க தனது மனைவியிடம் அவா் பணம் கேட்டாராம். அதற்கு மனைவி மறுத்ததால் வீட்டில் இருந்த எலி­ மருந்தை மதுவில் கலந்து குடித்துவிட்டாராம்.

இதையடுத்து, தூத்துக்;குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் வியாழக்கிழமை இரவு இறந்தாா். இதுகுறித்து ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.