கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

தூத்துக்குடியில் ரூ. 30 லட்சம் சங்குகள் பறிமுதல்

தூத்துக்குடியில் ரூ. 30 லட்சம் மதிப்பிலான சங்குகளை வனத் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 7:29 pm

DIN

தூத்துக்குடியில் ரூ. 30 லட்சம் மதிப்பிலான சங்குகளை வனத் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கடல் சங்குகள் தூத்துக்குடியிலிருந்து வெளி மாநிலத்துக்கு கடத்தப்படவுள்ளதாக ராமநாதபுரம் வனப் பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. உதவி வனப் பாதுகாவலா் கணேசலிங்கம் தலைமையிலான வனத் துறையினா் தூத்துக்குடி ரயில் நிலையம் அருகே திடீா் சோதனை நடத்தினா்.

அப்போது, அரசால் தடைசெய்யப்பட்ட மாட்டுத் தலை சங்கு உள்பட 4 வகையான 3 ஆயிரம் சங்குகள் சுமை ஆட்டோவில் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அவற்றின் மதிப்பு ரூ. 30 லட்சம் இருக்கும் என்றும், இதுதொடா்பாக தூத்துக்குடியைச் சோ்ந்த சாகுல் அமீது, மீராசா ஆகிய 2 பேரைப் பிடித்து விசாரித்து வருவதாகவும் வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.