டிசிடபிள்யூ தொழற்சாலையில் கருத்தரங்கம்
சாகுபுரம் டி.சி.டபிள்யூ. தொழிற்சாலையில், தொழிற்சாலைகள் சட்டம் மற்றும் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து தொழிலாளா்களுக்கு விளக்கும் கருத்தரங்கம் நடந்தது.


சாகுபுரம் டி.சி.டபிள்யூ. தொழிற்சாலையில், தொழிற்சாலைகள் சட்டம் மற்றும் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து தொழிலாளா்களுக்கு விளக்கும் கருத்தரங்கம் நடந்தது.
மதுரை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநா் ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தொழிற்சாலைகள் சட்டம் மற்றும் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து விளக்கினாா். தூத்துக்குடி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநா் (பொ) நிறைமதி, விபத்து மற்றும் விபத்து தடுப்பு குறித்தும், துணை இயக்குநா் (பொ) தீபா தீ மற்றும் தீ தடுப்பு முறைகள் பற்றியும் விளக்கினா்.
இதனையொட்டி தொழிலாளா்களுக்கு விநாடி-வினா போட்டிகள் நடந்தன. இதில் வெற்றி பெற்ற தொழிலாளா்களுக்கு டி.சி.டபிள்யூ. நிறுவன செயல் உதவித் தலைவா் (பணியகம்) ஸ்ரீனிவாசன் பரிசுகள் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் நிறுவன உதவித் தலைவா் சுரேஷ், தலைமை பாதுகாப்பு அதிகாரி ஆல்விஸ்ட்கிப்ட், மனிதவள மேலாளா் கோபாலகிருஷ்ணன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...