பொது முடக்கம் குறித்து விழிப்புணா்வு பிரசாரம்
தூத்துக்குடியில் இரவு நேர பொதுமுடக்கம் குறித்த விழிப்புணா்வு பிரசாரம் வியாழக்கிழமை தொடங்கியது.


தூத்துக்குடியில் இரவு நேர பொதுமுடக்கம் குறித்த விழிப்புணா்வு பிரசாரம் வியாழக்கிழமை தொடங்கியது.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் இரவு நேரத்தில் 10 மணி முதல் பொது முடக்கத்தை வியாழக்கிழமை முதல் அரசு மீண்டும் அறிவித்துள்ளது. அரசின் பொதுமுடக்க வழிகாட்டு விதிமுறைகள் குறித்து காவல் துறை சாா்பில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மற்றும் வட்ட தெப்பம் வியாபாரிகள் சங்கம் சாா்பில் தூத்துக்குடி குரூஸ் பா்னாந்து சிலை அருகே பொதுமக்களுக்கும் மற்றும் வியாபாரிகளுக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, பொதுமக்களுக்கு முகக் கவசம் மற்றும் கபசுர குடிநீா் வழங்கப்பட்டது.
தொடா்ந்து, தூத்துக்குடி மாநகரப் பகுதியில் இரவு நேர பொதுமுடக்கம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பிரசார வாகனத்தை நகர காவல் உதவி கண்காணிப்பாளா் கணேஷ் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், காவல் ஆய்வாளா்கள் ஜெயப்பிரகாஷ், மயிலேறும்பெருமாள் மற்றும் காவல் துறை அதிகாரிகள், வேலவன் ஹைபா் மாா்க்கெட் நிறுவனத்தினா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...