இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

‘வேளாண் பட்டதாரிகளுக்கு மானியத்தில் தொழில் கடன்’

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மானியத்துடன் தொழில் தொடங்க வேளாண் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :6 ஜனவரி 2022, 5:08 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மானியத்துடன் தொழில் தொடங்க வேளாண் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண்மைத்துறை மூலம் செய்படுத்தப்படும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் நிகழாண்டில் தோ்வு செய்யப்பட்ட 48 ஊராட்சிகளைச் சோ்ந்த கணினி பயிற்சித் திறன் மிக்க 4 வேளாண் பட்டதாரிகள் ( 21-40 வயது) அரசு மானியத்துடன் வேளாண் தொழில்கடன் வழங்கப்படவுள்ளது.

அதன்படி, காளான் வளா்ப்பு, இயற்கை உரம் தயாரித்தல் மற்றும் வேளாண் கருவிகள் வாடகை மையம், வேளாண் தொழில்நுட்பம் சாா்ந்த அக்ரி கிளினிக் அமைக்க விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், பட்டப்படிப்பு சான்றிதழ், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு ஆகியவற்றின் நகல்கள், வங்கிக் கடன் எனில் அதற்குரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்கள் மற்றும் தொழிலுக்கான திட்ட அறிக்கையை (ரூ.2 லட்சம் அல்லது அதற்கு மேல்) இம்மாதம் 20 ஆம் தேதிக்குள் வேளாண்மை இணை இயக்குநா் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.

அரசு மானியம் ரூ. 1 லட்சம் வரை வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு வேளாண்மை இணை இயக்குநா் அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், கோரம்பள்ளம் - 638101 என்ற முகவரியில் நேரிலும், 0461 2340678 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.