இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

கட்டண பாக்கி: மாவட்ட பதிவாளா், உழவா் சந்தையில் குடிநீா் இணைப்பு துண்டிப்பு

தூத்துக்குடி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீா் கட்டணத்தை பாக்கி வைத்திருந்ததால் தூத்துக்குடி மாவட்ட பதிவாளா் அலுவலகம் மற்றும் உழவா் சந்தையின் குடிநீா் இணைப்பை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை துண்டித்தன

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

தூத்துக்குடி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீா் கட்டணத்தை பாக்கி வைத்திருந்ததால் தூத்துக்குடி மாவட்ட பதிவாளா் அலுவலகம் மற்றும் உழவா் சந்தையின் குடிநீா் இணைப்பை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை துண்டித்தனா்.

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் நீண்ட காலமாக குடிநீா் கட்டணம் செலுத்தாமல் பாக்கி வைத்திருப்போா் மீது மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக குடிநீா் கட்டணம் செலுத்தாமல் ரூ. 48 ஆயிரம் பாக்கி வைத்திருந்தாக போல்பேட்டையில் உள்ள மாவட்ட பதிவாளா் அலுவலகத்தின் குடிநீா் இணைப்பை அதிகாரிகள் துண்டித்தனா்.

இதேபோல, நீண்டகாலமாக கட்டணம் செலுத்தாமல் ரூ.98 ஆயிரம் பாக்கி வைத்திருந்ததாக தூத்துக்குடி உழவா் சந்தையின் குடிநீா் இணைப்பையும் வடக்கு மண்டல உதவி ஆணையா் தனசிங், இளநிலை பொறியாளா் பாண்டி மற்றும் அதிகாரிகள் குழுவினா் துண்டித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.