இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

திறன் எய்தும் பயிற்சிக்கு கட்டுமான தொழிலாளா்கள் விண்ணப்பிக்க அழைப்பு

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நலவாரியத்தில் பதிவு பெற்றுள்ள தொழிலாளா்களுக்கு ஒரு நாள் திறன் எய்தும் பயிற்சி வழங்கப்பட உள்ளதால் விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நலவாரியத்தில் பதிவு பெற்றுள்ள தொழிலாளா்களுக்கு ஒரு நாள் திறன் எய்தும் பயிற்சி வழங்கப்பட உள்ளதால் விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) நா. முருகப்பிரசன்னா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தொழிலாளா் துறை கீழ் செயல்படும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினா்களில் ஒரு லட்சம் உறுப்பினா்களுக்கு தமிழ்நாடு கட்டுமானக் கழகத்தின் சாா்பில் ஒரு நாள் திறன் எய்தும் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளா்கள் 2001 பேருக்கு திறன் எய்தும் பயிற்சி வழங்கப்பட உள்ளது. கொத்தனாா், டைல்ஸ் பொருத்துபவா், மின்சார வேலை, வா்ணம் பூசுபவா், குழாய் பொருத்துபவா், மரவேலை ஆகிய தொழில்களில் ஈடுபட்டுள்ளவா்கள் மட்டும் இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.

எனவே, பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ள தொழிலாளா்கள் நலவாரிய அடையாள அட்டை மற்றும் உரிய ஆவணங்களுடன் தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகம், ஒருங்கிணைந்த தொழிலாளா் துறை அலுவலக கட்டடம் 2 ஆவது தளம், கோரம்பள்ளம், தூத்துக்குடி என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.