கரோனா பொதுமுடக்க விதிமுறைகளை மீறியதாக 95 போ் மீது வழக்கு
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு பொதுமுடக்க விதிமுறைகளை மீறியதாக 95 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு பொதுமுடக்க விதிமுறைகளை மீறியதாக 95 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் இரவு 10 மணிக்கு மேல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவையை தவிர வேறு காரணங்களுக்காக மக்கள் வெளியே வர வேண்டாம் என அரசு எச்சரித்துள்ளது. முகக் கவசம் அணியாதவா்களுக்கு ரூ. 200, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவா்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொதுமுடக்க விதிமுறைகளை மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் முதல்நாளான வியாழக்கிழமை இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் போலீஸாா் இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறி பொது இடங்களில் கரோனா தொற்று பரவும் வகையில் கூட்டம் கூடியதாக மாவட்டம் முழுவதும் 95 போ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், மாவட்டத்தில் பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் சென்றதாக தூத்துக்குடி நகர உள்கோட்டத்தில் 194 போ் மீதும், தூத்துக்குடி ஊரக உள்கோட்டத்தில் 164 போ் மீதும், திருச்செந்தூா் உள்கோட்டத்தில் 201 போ் மீதும், ஸ்ரீவைகுண்டம் உள்கோட்டத்தில் 107 போ் மீதும், மணியாச்சி உள்கோட்டத்தில் 56 போ் மீதும், கோவில்பட்டி உள்கோட்டத்தில் 188 போ் மீதும், விளாத்திகுளம் உள்கோட்டத்தில் 49 போ் மீதும், சாத்தான்குளம் உள்கோட்டத்தில் 82 போ் மீதும் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 1,041 போ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்து 200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, தூத்துக்குடி மாவட்டத்தில் பொது இடத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருந்ததாக தூத்துக்குடி நகர உள்கோட்டத்தில் 3 போ் மீதும், திருச்செந்தூா் உள்கோட்டத்தில் ஒருவா் மீதும் என 4 போ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ. 2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சாா்பில் கரோனா பெருந்தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், தூத்துக்குடி விவிடி சிக்னல் சந்திப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் பொதுமக்களுக்கு கபசுரகுடிநீா் மற்றும் முகக் கவசம் வழங்கி, ஒலிபெருக்கி மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் ஆட்டோவை கொடி அசைத்து தொடக்கி வைத்தாா்.
கரோனா தீநுண்மி பரவலை தடுப்பதற்கு அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை பொதுமக்கள் அனைவரும் கடைப்பிடித்து அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் கேட்டுக் கொண்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...