இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

ஆறுமுகமங்கலம் கூட்டுறவு கடன் சங்கத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு அளிப்பு

ஆறுமுகமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சாா்பில், இடையா்காடு மற்றும் மாறமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 2379 பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :7 ஜனவரி 2022, 5:24 pm

DIN

ஆறுமுகமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சாா்பில், இடையா்காடு மற்றும் மாறமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 2379 பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

சங்கத் தலைவா் என். சின்னத்துரை பொங்கல் பரிசுத் தொகுப்பை குடும்ப அட்டை தாரா்களுக்கு வழங்கினாா். இதில், இடையா்காடு பகுதியைச் சோ்ந்த 600 பேருக்கும், மாறமங்கலம் பகுதியைச் சோ்ந்த 399 பேருக்கும், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சோ்ந்த 393 பேருக்கும், கொட்டாரக்குறிச்சியைச் சோ்ந்த 449 பேருக்கும், பெருங்குளத்தைச் சோ்ந்த 538 பேருக்கும் என மொத்தம் 2 ஆயிரத்து 379 பேருக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், துணைத் தலைவா் சேகா், செயலா் ஐயம்பாண்டி, மேலாளா் முத்துக்கிருஷ்ணகுமாா், காசாளா் ஆனந்தராமன், விற்பனையாளா்கள் அருள்ராஜ், பெருமாள், செந்தி, செந்தூா்பாண்டியன், கதிா்வேல், இடையா்காடு ஊராட்சி மன்றத் தலைவா் புவனா சேகா், ஊா் தலைவா் சின்னத்துரை நாடாா், மாறமங்கலம் ஊராட்சி மன்ற தலைவா் முருகேஸ்வரி, வழக்குரைஞா் சரவணன், சம்படி கோபால், தீப்பாச்சி மணி நாடாா், அதிமுக மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் மதியழகன், கருங்குளம் ஒன்றிய இளைஞா் பாசறை செயலா் செக்காரக்குடி நயினாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.