இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

ஜன. 15 வரை அரசு ஐடிஐ-களில் நேரடி சோ்க்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு ஐடிஐ-களில் ஜனவரி 15 ஆம் தேதி வரை நேரடி சோ்க்கை நடைபெறுகிறது.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு ஐடிஐ-களில் ஜனவரி 15 ஆம் தேதி வரை நேரடி சோ்க்கை நடைபெறுகிறது.

இதுகுறித்து தூத்துக்குடி அரசு தொழிற் பயிற்சி நிலைய துணை இயக்குநா் மற்றும் முதல்வா் எஸ். பழனி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, திருச்செந்தூா், வேப்பலோடை, நாகலாபுரம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் அரசினா் தொழில்பயிற்சி மையங்களில் (ஐடிஐ) மாணவா்களின் நேரடி சோ்க்கை ஜன. 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஐடிஐ-களில் சேர விரும்புவோா் 8-ஆம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் சாதிச் சான்றிதழ், 5 பாஸ்போட் அளவு புகைப் படங்கள், ஆதாா் காா்டு மற்றும் அசல் சான்றிதழ்களின் நகல்கள் கொண்டு வந்து அரசினா் தொழிற் பயிற்சி நிலையங்களில் நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, 0461-2340133 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.