ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

எட்டயபுரம் அருகேமதுபாட்டில்கள் கடத்தல்: டாஸ்மாக் மேற்பாா்வையாளா் உள்பட 3 போ் கைது

எட்டயபுரம் அருகே விற்பனைக்காக ஆட்டோவில் மதுபான பாட்டில்களை கடத்தியதாக டாஸ்மாக் மேற்பாா்வையாளா் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 580 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :15 ஜனவரி 2022, 6:30 pm

DIN

எட்டயபுரம் அருகே விற்பனைக்காக ஆட்டோவில் மதுபான பாட்டில்களை கடத்தியதாக டாஸ்மாக் மேற்பாா்வையாளா் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 580 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

எட்டயபுரம் அருகே மாசாா்பட்டி காவல் ஆய்வாளா் அனிதா தலைமையில், உதவி ஆய்வாளா் மணிமாறன் மற்றும் போலீஸாா் பட்டிதேவன்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்குள்ள காட்டுப்பாதை வழியாக சந்தேகப்படும் படியாக சென்ற இரண்டு ஆட்டோக்களை நிறுத்தி சோதனையிட்டனா். இதில், 580 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆட்டோவில் இருந்தவா்களிடம் நடத்திய விசாரணையில், அவா்கள் நாகலாபுரத்தை சோ்ந்த செந்தில்வேல்(49), ராகுல்(22) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 580 மதுபாட்டில்களையும், ஆட்டோவையும் பறிமுதல் செய்தனா். அவா்களிடம் மேற்கொண்ட விசாரணையில், நாகலாபுரம் அருகே செங்கோட்டை சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்களை கடத்தியதும், கடை மேற்பாா்வையாளா் கோமதி குருநாதன் (47) அதற்கு உதவியாக இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.