இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

தூத்துக்குடியில் வீட்டில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தொழிலாளி காயம்

 தூத்துக்குடியில் சனிக்கிழமை அதிகாலை திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தொழிலாளி காயமடைந்தாா்.

News image
Updated On :15 ஜனவரி 2022, 6:30 pm

DIN

 தூத்துக்குடியில் சனிக்கிழமை அதிகாலை திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தொழிலாளி காயமடைந்தாா்.

தூத்துக்குடி மேல சண்முகபுரம் பெருமாள்தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருபவா் அமல புஷ்பம். விருதுநகரில் வசித்து வரும் இவரது சகோதரா் அருள்மணி (50) தனது சகோதரியை பாா்ப்பதற்காக சனிக்கிழமை தூத்துக்குடி வந்துள்ளாா். அப்போது, வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் அருள்மணிக்கு லேசான காயம் ஏற்பட்டது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு அவா் வீடு திரும்பினாா்.

தூத்துக்குடி துறைமுகத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவருக்கு சொந்தமான அந்த வீடு பழுதான நிலையில் காணப்பட்டதாம். இது குறித்து தென்பாகம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இதற்கிடையே, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு, காயமடைந்தவருக்கு ஆறுதல் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.