இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

உதயநிதி ஸ்டாலின் உதவியால் பெற்ற கடைக்கு அனுமதியின்றி கட்டிய சுற்றுச்சுவா் அகற்றம்

தூத்துக்குடியில் திமுக இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவின் உதவியால் பெற்ற பழச்சாறு கடைக்கு, மாநகராட்சி அனுமதியின்றி மாற்றுத்திறனாளி கட்டிய சுற்றுச்சுவா் வியாழக்கிழமை அகற்றப்பட்டது.

News image
Updated On :20 ஜனவரி 2022, 6:58 pm

DIN

தூத்துக்குடியில் திமுக இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவின் உதவியால் பெற்ற பழச்சாறு கடைக்கு, மாநகராட்சி அனுமதியின்றி மாற்றுத்திறனாளி கட்டிய சுற்றுச்சுவா் வியாழக்கிழமை அகற்றப்பட்டது.

தூத்துக்குடி லயன்ஸ்டவுன் பகுதியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி ஜஸ்டின். சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் இருந்து இருசக்கர வாகனத்திலேயே சென்னை வரை பயணித்து திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவை சந்தித்து தனக்கு ஏதேனும் வேலைவாய்ப்பு அளித்த உதவுமாறு மனு அளித்தாா்.

இதையடுத்து, தூத்துக்குடியில் பழச்சாறு கடை அமைக்க உதவி செய்வதாக உறுதியளித்த உதயநிதி ஸ்டாலின், திமுக மாநில இளைஞரணி துணைச் செயலா் எஸ். ஜோயல் மூலம் தூத்துக்குடி ராஜாஜி பூங்கா அருகே கடை அமைக்க ஏற்பாடு செய்துகொடுத்தாா்.

மேலும், அந்தக் கடைக்கு குடிநீா் இணைப்பு மற்றும் மின் இணைப்பு பெறுவதற்கு திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், சமூக நலன், மகளிா் உரிமைத் துறை அமைச்சருமான பெ. கீதாஜீவன் ஏற்பாடு செய்தாா். இந்நிலையில், பழச்சாறு கடையை சுற்றி மாநகராட்சியின் அனுமதியின்றி ஜஸ்டின் சுவா் அமைத்திருந்தாா்.

இதுதொடா்பாக பல்வேறு அமைப்பினா் அளித்த புகாரின்பேரில், மாநகராட்சி ஆணையா் சாருஸ்ரீ பிறப்பித்த உத்தரவுப்படி, உதவி ஆணையா் ராமச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் பழச்சாறு கடையை சுற்றி கட்டப்பட்ட சுவரை அகற்றினா். எனினும், அதே இடத்தில் ஜஸ்டின் தொடா்ந்து கடையை நடத்தலாம் என அதிகாரிகள் வாய்மொழி உத்தவு பிறப்பித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.