தூத்துக்குடி, அழகப்பபுரத்தில் கால்நடை மருத்துவ முகாம்
தூத்துக்குடி அருகேயுள்ள விட்டிலாபுரம், வல்லகுளம் கிராமங்களில் கால்நடை மருத்துவ மற்றும் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.


தூத்துக்குடி அருகேயுள்ள விட்டிலாபுரம், வல்லகுளம் கிராமங்களில் கால்நடை மருத்துவ மற்றும் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், கால்வாய், செய்துங்கநல்லூா் கால்நடை மருத்துவமனைகள் சாா்பில் நடைபெற்ற இம்முகாமுக்கு, கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநா் ஆண்டனி இக்னேஷியஸ் சுரேஷ் தலைமை வகித்தாா். உதவி மருத்துவா்கள் வேல்மாணிக்கவல்லி, தெய்வானை, செய்யதுஅபுதாகீா் ஆகியோா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனா். சிறந்த கால்நடை வளா்ப்பாளா்களுக்கு வல்லகுளம் ஊராட்சித் தலைவா் கமலம் பரிசு வழங்கினாா்.
முகாம் முடிவில், 391கோழிகளுக்கு கழிச்சல்நோய் தடுப்பூசியும், 1,604ஆடு, மாடுகளுக்கு குடற்புழு நீக்கமும், 20 பசுக்களுக்கு செயற்கைமுறை கருவூட்டலும், 40 பசுக்களுக்கு மலடுநீக்கம் உள்ளிட்ட சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன.
குரும்பூா் அருகிலுள்ள அழகப்பபுரத்தில் நடைபெற்ற கால்நடை விழிப்புணா்வு முகாமுக்கு கால்நடை பராமரிப்புத்துறை திருச்செந்தூா் கோட்ட உதவி இயக்குநா் செல்வகுமாா், கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவு உதவி இயக்குநா் சந்தோசம் முத்துக்குமாா்ஆகியோா் தலைமை வகித்தனா். அழகப்பபுரம் ஊராட்சித் தலைவா் பூமாரி பாலமுருகன், சிறந்த கால்நடை விவசாயிகளுக்கு பரிசு வழங்கினாா். நாலுமாவடி கால்நடை மருந்தக மருத்துவா் சுரேஷ் தலைமையில் மருத்துவக்குழுவினா் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...