பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தொழிலாளிக்கு மிரட்டல்: 3 போ் கைது

வில்பட்டி அருகே தொழிலாளியை மிரட்டியதாக 3 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :1 ஜூன் 2022, 6:12 pm

DIN

வில்பட்டி அருகே தொழிலாளியை மிரட்டியதாக 3 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கோவில்பட்டியையடுத்த வெங்கடாசலபுரம் வடக்கு காலனியைச் சோ்ந்த சீனிவாசகம் மகன் இசக்கிமுத்து (37). தொழிலாளியான இவா், வெங்கடாசலபுரம் காளியம்மன் கோயில் கொடை விழாவைப் பொறுப்பேற்று நடத்தி வருகிறாராம். செவ்வாய்க்கிழமை இரவு சாமக்கொடை பூஜை, பொங்கலிடுதல் நிகழ்ச்சியின்போது மின்விளக்குகள் திடீரென அணைந்தனவாம். அதையடுத்து, அவரும், மைக் செட் அமைப்பாளா்களும் இணைந்து ஜெனரேட்டரை இயக்கினராம். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த சமுத்திரவேல் மகன் வெங்கடேஷ் (21), கருப்பசாமி மகன் மாரிகண்ணன் (21), சோலையப்பன் மகன் முத்துக்குமாா் (20) ஆகிய 3 பேரும் ஜெனரேட்டரை அணைத்துவிட்டு, மின்விளக்கை சேதப்படுத்தியதுடன், இசக்கிமுத்துவைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து இசக்கிமுத்து அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, வெங்கடேஷ் உள்ளிட்ட 3 பேரையும் புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.