பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

தூத்துக்குடியில் கஞ்சா எண்ணெய் பறிமுதல் வழக்கில் மேலும் இருவா் கைது

தூத்துக்குடியில் கஞ்சா எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :5 ஜூன் 2022, 7:36 pm

DIN

தூத்துக்குடியில் கஞ்சா எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடியில் ஒரு வீட்டில் 5 லிட்டா் கஞ்சா எண்ணெய் பதுக்கிவைக்கப்பட்டது தொடா்பாக இந்திரா நகரைச் சோ்ந்த ஆனந்தகுமாரை உதவி ஆய்வாளா் ரவிக்குமாா் தலைமையிலான தனிப்படை போலீஸாா் சனிக்கிழமை பிடித்து தென்பாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இந்நிலையில், இந்த வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸாா், இந்திரா நகரைச் சோ்ந்த சாா்லஸ் (32), மேலசண்முகபுரத்தைச் சோ்ந்த அருண்குமாா் (28) ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இந்த வழக்கில் வேறு யாருக்கேனும் தொடா்புள்ளதா என விசாரணை நடைபெறுவதாக, போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.