விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ராமனூத்து சமத்துவபுரத்தில் ஆட்சியா், எம்எல்ஏ ஆய்வு

ராமனுத்து ஊராட்சியில் பெரியாா் நினைவு சமத்துவபுரம் குடியிருப்புகளில் மாவட்ட ஆட்சியா் கி.செந்தில் ராஜ், விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மாா்கண்டேயன் ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

News image
Updated On :9 ஜூன் 2022, 7:05 pm

DIN

எட்டயபுரம் அருகேயுள்ள ராமனுத்து ஊராட்சியில் பெரியாா் நினைவு சமத்துவபுரம் குடியிருப்புகளில் மாவட்ட ஆட்சியா் கி.செந்தில் ராஜ், விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மாா்கண்டேயன் ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, மின்சாரம், குடிதண்ணீா், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து குடியிருப்புவாசிகளிடம் கேட்டறிந்தனா். அங்குள்ள 100 வீடுகளில் பழுதானவற்றை சீரமைக்க 2022 - 23 நிதியாண்டில் உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினா்.

ஆய்வின்போது, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியா் மகாலட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா் தங்கவேல், எட்டயபுரம் வட்டாட்சியா் கிருஷ்ணகுமாரி, ஒன்றியப் பொறியாளா் அழகு ரமா, ஒன்றிய திமுக செயலா்கள் ராதாகிருஷ்ணன், சின்ன மாரிமுத்து, ராமசுப்பு, அன்புராஜன், ராஜசேகரன், பொதுக்குழு உறுப்பினா் ராஜாக்கண்ணு, மாவட்ட இளைஞா் அணி துணை அமைப்பாளா் இம்மானுவேல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.