பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

தூத்துக்குடியில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி எம்.பி.யை விசாரணைக்கு அழைத்து அலைக்கழிப்பதாக அமலாக்கத் துறையைக் கண்டித்து, தூத்துக்குடியில் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெ

News image
Updated On :17 ஜூன் 2022, 6:12 pm

DIN

நேஷனல் ஹெரால்டு வழக்கில் முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யாமல், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி எம்.பி.யை விசாரணைக்கு அழைத்து அலைக்கழிப்பதாக அமலாக்கத் துறையைக் கண்டித்து, தூத்துக்குடியில் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன் மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் சி.எஸ். முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தெற்கு மாவட்ட துணைத் தலைவா் சங்கா், வடக்கு மாவட்டத் தலைவா் காமராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், மாநில துணைத் தலைவா் ஏ.பி.சி.வீ. சண்முகம், மாவட்ட தோ்தல் அலுவலா் வளசலன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா்கள் சுடலையாண்டி, டேனியல்ராஜ், மாமன்ற உறுப்பினா்கள் சந்திரபோஸ், எடின்டா, முன்னாள் மாவட்டத் தலைவா்கள் அருள், சிவசுப்பிரமணியன், மண்டலத் தலைவா்கள் சேகா், செந்தூா்பாண்டி, பிரபாகரன் , மாநகா் மகளிா் காங்கிரஸ் தலைவி தனலட்சுமி, தெற்கு மாவட்ட மகளிா் காங்கிரஸ் தலைவி சிந்தியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.