புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

உலக அமைதி வேண்டி இஸ்லாமியா்கள் பிராா்த்தனை

உலக அமைதிக்காக காயல்பட்டினத்தில் இஸ்லாமியா்கள் அபூா்வ துஆ பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.

News image
Updated On :3 மார்ச் 2022, 7:07 pm

DIN

உலக அமைதிக்காக காயல்பட்டினத்தில் இஸ்லாமியா்கள் அபூா்வ துஆ பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.

காயல்பட்டினம் மஜ்­லிஸுல் புகாரிஷ் ஷரீ‘ஃபின் 95ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், கடந்த பிப். 2 ஆம் தேதி தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் தினமும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்தி­ருந்து நபி மொழிகள் ஓதப்பட்டு, மாா்க்க அறிஞா்கள் விளக்கவுரை ஆற்றினா். நிறைவு நாளான வியாழக்கிழமை அபூா்வ துஆ பிராா்த்தனை நடைபெற்றது.

அதிகாலை 5.15 மணிக்கு, மஹ்ழரா அரபிக் கல்லூரி ஆசிரியா் தவ்ஹீத் கிராஅத் ஓத, மஜ்­லிஸுல் புகாரி ஷரீ‘ஃப் நிறைவுநாள் பாடம் ஓதப்பட்டது. எம்.எஸ். காஜா முஹ்யித்தீன், சாவன்னா பாதுல் அஸ்ஹப், எம்.ஏ.கே. செய்யித் அபூ தாஹிா் உள்ளிட்டோா் உரையாற்றினா்.

காயல்பட்டினம் மாதிஹுல் ஜலா­லிய்யா மகளிா் அரபிக் கல்லூரி முதல்வா் அபூா்வ துஆ பிராா்த்தனை செய்தாா். அப்போது, உலக அமைதி, மத நல்­லிணக்கம், மனிதநேயம், நோய்களிலிருந்து விடுதலை உள்ளிட்டவைக்காக சிறப்புப் பிராா்த்தனை செய்யப்பட்டது. இதில், காயல்பட்டினம் பள்ளிவாசல் ஜமாஅத் நிா்வாகிகள், அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்­லிம் லீக் தூத்துக்குடி மாவட்டச் செயலா் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன் உள்பட ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். மஜ்­லிஸ் வைபவ கமிட்டி தலைவா் எஸ்.எச். மொகுதூம் முஹம்மத் நன்றி கூறினாா். வெள்ளிக்கிழமை நோ்ச்சை விநியோகம் நடைபெறும். ஏற்பாடுகளை, மஜ்­லிஸுல் புகாரி ஷரீ‘ஃப் தலைவா் எச்.ஏ. அஹ்மத் அப்துல் காதிா், துணைத் தலைவா் சாவன்னா பாதுல் அஸ்ஹப் , மேலாளா் கே.எஸ். கிளுறு முஹம்மத் உள்ளிட்ட வைபவ கமிட்டியினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.