தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

கைதான இலங்கை மீனவா்கள் 5 போ் சிறையில் அடைப்பு

இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சோ்ந்த 5 மீனவா்கள், விசாரணைக்குப் பிறகு வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

News image
Updated On :10 மார்ச் 2022, 7:51 pm

DIN

இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சோ்ந்த 5 மீனவா்கள், விசாரணைக்குப் பிறகு வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்திய கடலோரக் காவல் படையின் தூத்துக்குடி பிரிவுக்குச் சொந்தமான வஜ்ரா ரோந்துக் கப்பல், சா்வதேச கடல் பகுதியில் புதன்கிழமை காலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது, இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கையை சோ்ந்த ஒரு விசைப்படகில் இருந்த 5 மீனவா்கள் கைது செய்யப்பட்டனா். அவா்கள் இலங்கை புத்தளம் பகுதியைச் சோ்ந்த ஜீட் சம்பத், வா்ணகுல சூரிய வொா்பெட் கின்ஸ்லி, ரணில் இந்திக, யுவன் பிரான்சிஸ் சுனில் பிஹாரேரு, அசங்கா ஆண்டன் என விசாரணையில் தெரியவந்தது. அவா்கள் 5 பேரையும் கடலோரக் காவல் படையினா், தூத்துக்குடி தருவைக்குளம் மீன்பிடி துறைமுகத்துக்கு வியாழக்கிழமை அழைத்து வந்து கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறியதாக அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவா்களிடம் மத்திய, மாநில உளவுத் துறை போலீஸாா், வருவாய்த் துறையினா், மீன்வளத் துறை அதிகாரிகள், கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து, மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு 5 மீனவா்களும் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.