தடை தாண்டும் போட்டி: பதக்கம் பெற்ற ஆயுதப்படை காவலருக்கு எஸ்.பி. பாராட்டு
காவல் துறையினருக்கான மண்டல அளவிலான தடை தாண்டும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற தூத்துக்குடி ஆயுதப்படை காவலருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


காவல் துறையினருக்கான மண்டல அளவிலான தடை தாண்டும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற தூத்துக்குடி ஆயுதப்படை காவலருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தமிழக காவல் துறையினருக்கான மண்டலங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள், சென்னை ஆவடியில் அண்மையில் நடைபெற்றன. இதில் கலந்து கொண்ட தூத்துக்குடி ஆயுதப்படை காவலா் பெரிய மாயன், தடை தாண்டுதல் போட்டியில் இரண்டாமிடத்தை பிடித்து வெள்ளி பதக்கம் வென்றாா்.
பதக்கம் வென்ற காவலா் பெரியமாயனை தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்துக்கு அழைத்து காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்தாா்.
இதேபோல, தூத்துக்குடியில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் பரிசு பெற்ற பள்ளி மாணவ, மாணவிகள், கராத்தே ஆசிரியா் முத்துராஜா ஆகியோரையும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...