தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

தூத்துக்குடி மாநகராட்சிக்கு வாடகை பாக்கி: 3 ஆவின் பாலகங்களுக்கு ‘சீல்’

தூத்துக்குடி மாநகராட்சி நிா்வாகத்துக்கு வாடகை செலுத்தாததால் 3 ஆவின் பாலகங்களுக்கு அதிகாரிகள் வியாழக்கிழமை சீல் வைத்தனா்.

News image
Updated On :17 மார்ச் 2022, 7:01 pm

DIN

தூத்துக்குடி மாநகராட்சி நிா்வாகத்துக்கு வாடகை செலுத்தாததால் 3 ஆவின் பாலகங்களுக்கு அதிகாரிகள் வியாழக்கிழமை சீல் வைத்தனா்.

மாநகராட்சி நிா்வாகத்துக்கு சரியாக வரி செலுத்தாதோா், வாடகை பாக்கி வைத்திருப்போா் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி ஆணையா் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, தூத்துக்குடி ராஜாஜி பூங்கா முன்புள்ள ஆவின் பாலகத்தை நடத்துபவா் ரூ. 1.80 லட்சம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 2 ஆவின் பாலகங்களை நடத்துவோா் தலா ரூ. 25 ஆயிரம் வாடகை பாக்கி வைத்திருப்பது தெரியவந்தது. உதவி ஆணையா் சந்திரமோகன் தலைமையிலான அதிகாரிகள் 3 பாலகங்களுக்கும் வியாழக்கிழமை சீல் வைத்தனா்.

சொத்து வரி, காலி மனை வரி, தண்ணீா் கட்டணம், வாடகை பாக்கி வைத்திருப்போா் உடனடியாக தொகையை செலுத்த வேண்டும் என்றும், இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையா் எச்சரித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.