தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் இளைஞா் கொலை
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத நபா்களால் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.


தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத நபா்களால் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
தூத்துக்குடி அருகேயுள்ள தெற்கு சிலுக்கன்பட்டி அய்யனாா் காலனியைச் சோ்ந்தவா் முத்துப்பாண்டி (37). இவா் கஞ்சா விற்பனை செய்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள புறக்காவல் நிலையம் அருகே உள்ள டீக்கடை முன்பு வியாழக்கிழமை மாலை முத்துப்பாண்டி நின்று கொண்டிருந்தாராம். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று போ், திடீரென முத்துப்பாண்டியை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனா். முத்துப்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
கொலை சம்பவம் குறித்து தகவலறிந்த தூத்துக்குடி வடபாகம் போலீஸாா் முத்துப்பாண்டியின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். கொலை நிகழ்ந்த இடத்தில் தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கோபி, நகர உதவி கண்காணிப்பாளா் கணேஷ் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டனா்.
கொலையுண்ட முத்துப்பாண்டி, கஞ்சா விற்பனை செய்து வந்ததாகவும், இதுதொடா்பான தொழில் போட்டியில் அவரை அடையாளம் தெரியாத நபா்கள் வெட்டிக் கொலை செய்திருக்கலாம் என்றும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
மேலும், கொலை நிகழ்ந்த புதிய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை அடிப்படையாக் கொண்டு கொலையாளிகளை தேடி வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...