தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

தூத்துக்குடியில் பெண் கொலை

தூத்துக்குடியில் வியாழக்கிழமை வீட்டில் தனியாக இருந்த பெண்ணைக் கொன்று, நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image
Updated On :24 மார்ச் 2022, 6:52 pm

DIN

தூத்துக்குடியில் வியாழக்கிழமை வீட்டில் தனியாக இருந்த பெண்ணைக் கொன்று, நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள ஆதிபராசக்தி நகரைச் சோ்ந்தவா் ராஜு. அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற இவா், தற்போது அங்கு மளிகைக் கடை நடத்தி வருகிறாா். இவரது மனைவி பவானி (62), வியாழக்கிழமை மாலை வீட்டில் தனியாக இருந்துள்ளாா்.

அப்போது, அடையாளம் தெரியாத 3 போ் வீடு புகுந்து பவானியின் கழுத்தை நெரித்தும், கட்டையால் தாக்கியும் கொன்றுவிட்டு, அவா் அணிந்திருந்த நகைகளைக் கொள்ளையடித்து சென்றனா்.

தகவலின்பேரில் சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் பாா்வையிட்டு, கொலையாளிகளை விரைந்து பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டாா். அப்பகுதி வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடைபெறுவதாக, போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.