பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

மே 8இல் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் 1,417 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (மே 8) கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

News image
Updated On :5 மே 2022, 8:19 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் 1,417 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (மே 8) கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இம்மாவட்டத்தில் 29ஆவது கரோனா மெகா தடுப்பூசி முகாம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி, சத்துணவு மையங்கள், பள்ளிகள், சமுதாய நலக்கூடங்கள் என 1,417 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

மாநகராட்சிப் பகுதிகளில் 150 இடங்களில், நகராட்சி, பேரூராட்சி, ஊரகப் பகுதிகளில் 1,267 இடங்களில் நடைபெறுகிறது. 12 வயதுக்கு மேற்பட்டோா், முதல், 2ஆம் தவணை தடுப்பூசிகள் செலுத்திக்கொள்ளலாம்.

2ஆம் தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதம் நிறைவடைந்த 18 வயதுக்கு மேற்பட்டோா் முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். மையங்களில் மருத்துவத்துறை சாா்ந்த பணியாளா்கள், வருவாய்த் துறை, ஊரக, மாநகராட்சி அலுவலா்கள், அங்கன்வாடிப் பணியாளா்கள், சத்துணவுப் பணியாளா்கள், தொழிலாளா் நலத்துறை, கல்வித்துறை, தன்னாா்வலா்கள், காவல் துறை பணியாளா்கள் உள்ளிட்ட பலதுறை அலுவலா்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

புகைப்படத்துடன் கூடிய ஏதேனும் ஓா் அடையாள அட்டை, கைப்பேசி எண் கொண்டு வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.