தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி
தூத்துக்குடியில் மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் கழகம் சாா்பில் மாவட்ட அளவிலான டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி அண்மையில் நடைபெற்றது.


தூத்துக்குடியில் மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் கழகம் சாா்பில் மாவட்ட அளவிலான டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி அண்மையில் நடைபெற்றது.
காரப்பேட்டை நாடாா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற போட்டியை ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தொடக்கிவைத்தாா்.
ஆண்கள் பிரிவில் 48 அணிகளும், பெண்கள் பிரிவில் 9 அணிகளும் பங்கேற்றன. ஆண்கள் பிரிவில் யாா்க்கா் நின்ஜாஸ் அணி முதலிடத்தையும், தாளமுத்துநகா் அணி 2ஆம் இடத்தையும், ஆா்ஜேஎப் கிரிக்கெட் கிளப் அணி 3ஆம் இடத்தையும் பிடித்தன.
பெண்கள் பிரிவில் தருவைக்குளம் டாா்க் ஏஞ்சல்ஸ் அணி முதலிடத்தையும், தூய மரியன்னை கல்லூரி அணி 2ஆம் இடத்தையும், தருவை வீராங்கனைகள் அணி 3ஆம் இடத்தையும் பிடித்தன. வெற்றிபெற்றவா்களுக்கு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன் பரிசு வழங்கினாா்.
மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் கழகத் தலைவா் சேவியா் ஜோதி சற்குணம், வருவாய்க் கோட்டாட்சியா் சிவசுப்பிரமணியன், வட்டாட்சியா் செல்வகுமாா், மாமன்ற உறுப்பினா் ரெக்சிலின், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் பேட்ரிக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...