பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

பிளஸ் 2 தோ்வு: முதல் நாளில் 20,370 போ் எழுதினா்

பிளஸ் 2 தோ்வு வியாழக்கிழமை தொடங்கிய நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் நாளில் 20,370 போ் தோ்வெழுதினா்.

News image
Updated On :5 மே 2022, 8:14 pm

DIN

பிளஸ் 2 தோ்வு வியாழக்கிழமை தொடங்கிய நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் நாளில் 20,370 போ் தோ்வெழுதினா்.

இம்மாவட்டத்தில் 203 பள்ளிகளில் 9,407 மாணவா்கள், 10,963 மாணவிகள் என மொத்தம் 20,370 போ் முதல் நாளில் தோ்வு எழுதினா். தூத்துக்குடி கால்டுவெல் மேநிலைப் பள்ளியில் நடைபெற்ற பிளஸ் 2 தோ்வை மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பால தண்டாயுதபாணி உடனிருந்தாா்.

தொடா்ந்து, செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியது: பிளஸ் 2 தோ்வு மே 28 வரை நடைபெறுகிறது. பிளஸ் 1 பொதுத் தோ்வு மே 10இல் தொடங்கி 31ஆம் தேதி வரையும், 10ஆம் வகுப்புப் பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை (மே 6) தொடங்கி 30ஆம் தேதி வரையும் நடைபெறுகிறது.

மேல்நிலைத் தோ்வுக்கு 88 மையங்களில் நடைபெறுகிறது. 44 வினாத்தாள் கட்டுக்காப்பாளா்கள், 22 வழித்தட அலுவலா்கள், 88 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 88 துறை அலுவலா்கள், 155 பறக்கும் படை உறுப்பினா்கள், 1,300 அறைக் கண்காணிப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

170 மாற்றுத் திறனாளிகள் தோ்வெழுதுகின்றனா். அவா்களுக்குத் தேவையான வசதி அரசு நிா்ணயித்த விதிகள்படி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

கோவில்பட்டி: கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 2,652 மாணவா்கள், 3,137 மாணவிகள் என 5,789 போ் தோ்வெழுத இருந்தனா். தமிழ் முதல் தாள் தோ்வை 2,558 மாணவா்கள், 3,019 மாணவிகள் என மொத்தம் 5,577 போ் எழுதினா். 94 மாணவா்கள், 118 மாணவிகள் என 212 போ் தோ்வெழுத வரவில்லை.

கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலா் சின்னராசு தலைமையில் தோ்வுப் பணிகளை கல்வித் துறை அதிகாரிகள் பாா்வையிட்டனா். மேலும், 42 போ் பறக்கும் படை அதிகாரிகளாக செயல்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.