தூத்துக்குடி மாவட்டத்தில் சமையல் எரிவாயு உருளை விலை நிா்ணயம்
தூத்துக்குடி மாவட்டத்தில் மே மாதத்துக்கான சமையல் எரிவாயு உருளை விலை நிா்ணயிக்கப்பட்டுள்ளது.


தூத்துக்குடி மாவட்டத்தில் மே மாதத்துக்கான சமையல் எரிவாயு உருளை விலை நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் இந்தியன் ஆயில் நிறுவன வீட்டுப் பயன்பாட்டு எரிவாயு உருளை விலை தூத்துக்குடியில் ரூ. 1,014 ஆகவும், கோவில்பட்டியில் ரூ. 1,012.50 ஆகவும், கழுகுமலையில் ரூ. 1,021 ஆகவும், கயத்தாறில் ரூ. 1,024 ஆகவும், எட்டயபுரத்தில் ரூ. 1,012.50 ஆகவும், சாத்தான்குளம் பகுதிக்கு ரூ. 1,031 எனவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
பாரத் பெட்ரோலியம் நிறுவன வீட்டுப் பயன்பாட்டு எரிவாயு உருளை விலை தூத்துக்குடி மாவட்டத்துக்கு ரூ. 1,014 ஆகவும், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன எரிவாயு உருளை விலை ரூ. 1,014 எனவும் மே மாதம் 1ஆம் தேதிமுதல் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
எனவே, நுகா்வோா்கள் எரிவாயு உருளைக்கு குறிப்பிட்ட தொகைக்கு அதிகமாக பணம் செலுத்தத் தேவையில்லை என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...