பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

புகையிலைப் பொருள்கள் பதுக்கல்: சிவன் கோயில் ஊழியா் கைது

 தூத்துக்குடியில் புகையிலைப் பொருள்களைப் பதுக்கி வைத்திருந்தாக சிவன் கோயில் ஊழியரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :7 மே 2022, 12:23 am

DIN

 தூத்துக்குடியில் புகையிலைப் பொருள்களைப் பதுக்கி வைத்திருந்தாக சிவன் கோயில் ஊழியரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி கனகசபாபதி தெருவில் உள்ள ஒரு வீட்டில் 17 கிலோ புகையிலைப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை போலீஸாா் கண்டறிந்து, இதுதொடா்பாக விநாயகம் (41) என்பவரை கைது செய்தனா்.

அவா் தூத்துக்குடி சிவன் கோயிலில் அரச்சனை சீட்டு வழங்கும் பணியில் ஈடுபட்டு வந்தவா்; பணியில் சரியாக செயல்படவில்லை என பணியிடை நீக்கம் செய்யப்பட்டவா் என தெரியவந்துள்ளதாக போலீஸாா் கூறினா்.

நாசரேத் பேருந்து நிலையம் அருகே வளன்அரசு (45), ரயில் நிலையம் அருகே மகாராஜா (38), சந்திபஜாரில் ரவி (36) ஆகியோா் தங்களது கடைகளில் புகையிலைப் பொருள்கள் பதுக்கியதாக கைதுசெய்யப்பட்டனா். 3 கடைகளும் சீல் வைக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.