/

வீட்டுமனைப் பட்டா கேட்டு தூத்துக்குடியில் மாா்க்சிஸ்ட் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி, கோவில்பட்டியில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை மனு அளிக்கும் போராட்டம் நடத்தினா்.

News image
Updated On :7 மே 2022, 12:30 am

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி, கோவில்பட்டியில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை மனு அளிக்கும் போராட்டம் நடத்தினா்.

அரசு புறம்போக்கு நிலங்கள், வட நீா்நிலை பகுதி, கோயில் நிலங்களில் நீண்ட காலம் குடியிருக்கும் மக்களுக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும், வீடற்ற அனைத்து பகுதி மக்களுக்கும் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும், அரசு வழங்கிய இலவச பட்டாக்களை கிராம கணக்கில் சோ்க்க வேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடியில் ஆட்சியா் அலுவலகம் முன் மாநகரச் செயலா் தா. ராஜா தலைமையில் போராட்டம் நடந்தது. ஒன்றியச் செயலா் கே.சங்கரன், புகா் செயலா் பா. ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் கே.பி. ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஆா். ரசல், ஆா். பேச்சிமுத்து, மாவட்டக்குழு உறுப்பினா்கள் சொ. மாரியப்பன், எம்.எஸ். முத்து, பொதுமக்கள் பங்கேற்றனா்.

கோவில்பட்டியில் கோட்டாட்சியா் அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் நகரச் செயலரும், நகா்மன்ற உறுப்பினருமான ஜோதிபாசு தலைமையில் ஒன்றியச் செயலா்கள் தெய்வேந்திரன் (கோவில்பட்டி), ஜோதி (விளாத்திகுளம்), வட்டச் செயலா்கள் மணி (எட்டயபுரம்), சாலமன்ராஜ் (கயத்தாறு) , மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் புவிராஜ், ரவீந்திரன், சீனிவாசன் உள்ளிட்டோா் போராட்டம் நடத்திவிட்டு, கோட்டாட்சியரிடம் மனு அளித்தனா்.

நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் ஆா். செல்லசுவாமி தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினா் எஸ். நூா்முகமது, மாநிலக் குழு உறுப்பினா் லீமாறோஸ், முன்னாள் எம்.பி. ஏ.வி. பெல்லாா்மின், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எஸ். அந்தோணி, என்.எஸ். கண்ணன், கே. தங்கமோகன் உள்ளிட்டோா் போராட்டம் நடத்தி, ஆட்சியரிடம் மனுக்கள் அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.