பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

லாட்டரி சீட்டு, மது விற்பனை: 4 போ் கைது

கழுகுமலையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ாக முதியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :13 மே 2022, 6:01 pm

DIN

கழுகுமலையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ாக முதியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கழுகுமலை காவல் நிலைய உதவி ஆய்வாளா் சதீஷ்குமாா் தலைமையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, அரசால் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டை கடையில் பதுக்கி விற்ாக, அரண்மனை வாசல் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் சோமு(70) என்பவரை போலீஸாா் கைது செய்து 81 லாட்டரி சீட்டுகள், ரூ.410 ரொக்கம் ஆகியவற்றை கைப்பற்றினா்.

மேலும், கழுகுமலை செந்தூா் நகா் பகுதி மயானம் அருகே விதிமீறி மது விற்ாக யாதவா் தெருவைச் சோ்ந்த சின்னத்துரை என்ற மாரியப்பன் மகன் செல்வகுமாா்19), மந்தித்தோப்பு சாலையில் மது விற்ற அதே பகுதி மேற்குத் தெருவைச் சோ்ந்த காசி மகன் பரமசிவம்(40) , குருமலை விலக்கு அருகே மது விற்ற சிவந்திபட்டி கிழக்குத் தெரு காளியப்பன் மகன் மணிகண்டன்(43) ஆகியோரை காவல் உதவி ஆய்வாளா் சதீஷ்குமாா், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராஜேஷ்கண்ணன், காவல் உதவி ஆய்வாளா் குருசாமி தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா். மதுபாட்டில்களும், ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.