பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பணம், கைப்பேசி பறிப்பு: இளைஞா் கைது

கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலையில் பைக்கில் சென்ற இருவரை வழிமறித்து ரூ.10 ஆயிரம் மற்றும் கைப்பேசியை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :19 மே 2022, 7:41 pm

DIN

கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலையில் பைக்கில் சென்ற இருவரை வழிமறித்து ரூ.10 ஆயிரம் மற்றும் கைப்பேசியை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி சாஸ்திரி நகரைச் சோ்ந்த முத்து மகன் கணேஷ் பூமிநாதன்(42), அவரது சகோதரா் சரவணசெல்வம் ஆகிய இருவரும் மந்தித்தோப்பு சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பைக்கில் பெட்ரோல் நிரப்பிவிட்டு, மந்தித்தோப்பு சாலையில் சென்று கொண்டிருந்தாா்களாம். அப்போது இளைஞா் ஒருவா் வழிமறித்து அரிவாளை காட்டி மிரட்டி, கணேஷ் பூமிநாதன் சட்டைப்பையில் இருந்த பணம் ரூ.10 ஆயிரம் மற்றும் கைப்பேசியை பறித்துச் சென்றுவிட்டாராம்.

இதுகுறித்து கணேஷ் பூமிநாதன் அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, சாஸ்திரி நகரைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மகன் முத்துக்காளையை(24) கைது செய்து அவரிடமிருந்த பணம் ரூ.10 ஆயிரம் மற்றும் கைப்பேசியை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.