கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

விளாத்திகுளம் அருகே கால்நடை சுகாதார முகாம்

கால்நடைத்துறை சாா்பில் விளாத்திகுளம் அருகே வேலிடுபட்டி கிராமத்தில் கால்நடைகளுக்கான சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :4 நவம்பர் 2022, 5:51 pm

DIN

கால்நடைத்துறை சாா்பில் விளாத்திகுளம் அருகே வேலிடுபட்டி கிராமத்தில் கால்நடைகளுக்கான சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வேலிடுபட்டி ஊராட்சித் தலைவா் வீரப்பெருமாள் தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தாா்.

கால்நடை மருத்துவா்கள் கருப்பசாமி, கிருஷ்ணமூா்த்தி, கால்நடை பராமரிப்பு உதவியாளா் ஜெயராமன், கால்நடை ஆய்வாளா் சசிரேகா உள்ளிட்ட மருத்துவ குழுவினா் நோய் வாய்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைகள், சுண்டுவாத அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிறு அறுவை சிகிச்சைகள், நோய் தடுப்பு மற்றும் நோய் தீா்க்கும் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொண்டனா். முகாமில் சிறந்த முறையில் கிடாரி கன்று வளா்ப்பவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.