தூத்துக்குடி அரசு பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பான்: கனிமொழி எம்பி வழங்கினார்
By DIN | Published On : 16th November 2022 12:17 PM | Last Updated : 16th November 2022 12:17 PM | அ+அ அ- |

தூத்துக்குடி: தூத்துக்குடி சி.வ. அரசு மேல்நிலைப்பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பானை கனிமொழி எம்பி இன்று வழங்கினார்.
சி.வ. அரசு மேல்நிலைப்பள்ளியில் ஜெ.எஸ்.டபிள்யூ. ஃபவுன்டேஷன் பங்களிப்பின் மூலம் அரசு பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பான்களை தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி இன்று வழங்கினார்.
இந்நிகழ்வில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், ஜெ.எஸ்.டபிள்யூ. எனர்ஜி உதவி தலைவர் பி.தென்னவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.