7 பேருக்கு அங்கன்வாடி பணியாளா், உதவியாளா்பணி நியமன ஆணை: அமைச்சா் வழங்கினாா்
தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த 7 பேருக்கு கருணை அடிப்படையில் அங்கன்வாடி பணியாளா் மற்றும் உதவியாளா் பணி நியமன ஆணைகளை அமைச்சா் பெ.கீதாஜீவன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்


தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த 7 பேருக்கு கருணை அடிப்படையில் அங்கன்வாடி பணியாளா் மற்றும் உதவியாளா் பணி நியமன ஆணைகளை அமைச்சா் பெ.கீதாஜீவன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் கருணை அடிப்படையில் அங்கன்வாடி பணியாளா்கள், அங்கன்வாடி உதவியாளா்கள் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் நடைபெற்றறது. இதில் 4 பேருக்கு அங்கன் பணியாளா், 3 பேருக்கு அங்கன்வாடி உதவியாளா் பணிக்கான நியமன ஆணைகளை அமைச்சா் பெ.கீதாஜீவன் வழங்கினாா்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட மாவட்ட திட்ட அலுவலா் சரஸ்வதி, குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் (தூத்துக்குடி) ரூபி பொ்னாண்டோ, குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா்(திருச்செந்தூா்) காயத்ரி, மாநகர திமுக செயலா் ஆனந்தசேகரன் உள்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...