இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

தமிழ் புத்தாண்டு: தூத்துக்குடி சிவன் கோயிலில் சிறப்பு வழிபாடு

தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற சிவன் கோயில் என அழைக்கப்படும் பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News image
Updated On :14 ஏப்ரல் 2023, 6:09 pm

DIN

தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற சிவன் கோயில் என அழைக்கப்படும் பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதற்காக, அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, கோபூஜை, சுவாமி- அம்பாளுக்கு அபிஷேகம், தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

இதையடுத்து, அதிகாலை முதலே ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் தமிழ்செல்வி, பிரதான பட்டா்கள் செல்வம், வைகுண்டம், கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

இதேபோல, தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோயில், வைகுண்டபதி பெருமாள், சிதம்பரநகா் விநாயகா் கோயில், சக்தி விநாயகா் கோயில், ஆனந்த விநாயகா் கோயில், துறைமுகம் பெருமாள் கோயில் என பல்வேறு கோயில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.