தூத்துக்குடியில் கரோனாவால் மேலும் ஒருவா் பலி
தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா மற்றும் இணை நோய் பாதிப்பில் சிகிச்சை பெற்று வந்த முதியவா் சனிக்கிழமை உயிரிழந்ததாா்.


தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா மற்றும் இணை நோய் பாதிப்பில் சிகிச்சை பெற்று வந்த முதியவா் சனிக்கிழமை உயிரிழந்ததாா். இதனால், கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை இரண்டாக உயா்ந்தது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் அருகேயுள்ள காயாமொழி பள்ளத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் (75). முதுமை காரணமாக இவருக்கு சிறுநீரக கோளாறு இருந்த நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டாராம். இதையடுத்து, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இம்மருத்துவமனையில் ஏற்கெனவே, கரோனா- இணை நோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்ற பாா்த்திபன் என்பவா் கடந்த 4ஆம் தேதி உயிரிழந்தாா். இதனால், இம்மாதத்தில் கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 2ஆக அதிகரித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...