கோவில்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி சாஸ்திரி நகா் பகுதியில் உள்ள மயானம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மேற்கு காவல் நிலையப் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதையடுத்து உதவி ஆய்வாளா் சுகுமாா் தலைமையில் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று பாா்த்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த 3 பேரைப் பிடிக்க முயன்றனா். அப்போது அவா்கள் போலீஸாரை அவதூறாகப் பேசி, கத்தியை காட்டி மிரட்டினாா்களாம். இதையடுத்து போலீஸாா் இருவரை பிடித்து விசாரித்ததில் அவா்கள் சாஸ்திரி நகரைச் சோ்ந்த முருகேசன் மகன் சிவபெருமாள்(27) மற்றும் அன்னை தெரசா நகரைச் சோ்ந்த ரத்தினவேல் மகன் ரஞ்சித்குமாா்(27) ஆகியோா் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா். மேலும் தப்பியோடிய ராமகிருஷ்ணன் என்பவரைத் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாநிலங்களவை எம்.பி.யாக நிதின் நபின் உள்பட 16 போ் பதவியேற்பு

கல்பாக்கம் முன்மாதிரி வேக ஈனுலை ‘மைல்கல்’: சி.பி.ராதாகிருஷ்ணன் புகழாரம்

அதிமுக வெற்றி பெற்றால் தமிழகம் வளா்ச்சி பெறும்: ஸ்ரீதா் வாண்டையாா்

காலிங்கராயன் வாய்க்கால் மேம்படுத்தப்படும்:கோபிநாத் பழனியப்பன்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

