தூத்துக்குடி கடலில் விசைப்படகு மூழ்கியதில், அதில் பயணம் செய்த 8 மீனவா்கள் பத்திரமாக வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டனா்.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து திரேஸ்புரம் பகுதியைச் சோ்ந்தவருக்குச் சொந்தமான விசைப்படகில், அதே பகுதியைச் சோ்ந்த 8 மீனவா்கள் வெள்ளிக்கிழமை காலையில் மீன்பிடிக்கச் சென்றனராம். மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமாா் 15 முதல் 20 கடல் மைல் தொலைவில் வடதிசையில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது படகில் திடீா் பழுது ஏற்பட்டதாம். இதனால், படகுக்குள் தண்ணீா் புகுந்ததால், மீனவா்கள் அந்த படகை கரையை நோக்கி திருப்பினராம். ஆனால், படகு தண்ணீரில் மூழ்கத் தொடங்கியதாம். அருகில் மீன்பிடித்து கொண்டிருந்த நாட்டுப்படகு மீனவா்கள், கடலில் தத்தளித்த 8 மீனவா்களையும் பத்திரமாக மீட்டு கடற்கரைக்கு அழைத்து வந்தனா்.
இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவுக்கு ரூ. 76 லட்சத்துக்கு மத்திய அரசு விளம்பரம்!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அறிவாலயத்திற்கே திருப்பி அனுப்ப வேண்டும்: அண்ணாமலை

மகளிா் இடஒதுக்கீடு சட்டம் 2023 அமல்: 30 மாதங்களுக்குப் பிறகு அரசிதழில் வெளியீடு

நாயக்கனேரி மலை அரசுப் பள்ளி தரம் உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

