சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில், விளாத்திகுளம், புதூா் ஒன்றியங்களில் தாய்மாா்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா நடைபெற்றது.
விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற விழாவுக்கு, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முத்துக்குமாா், தங்கவேல் ஆகியோா் தலைமை வகித்தனா்.
சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி.மாா்க்கண்டேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 200க்கும் மேற்பட்ட தாய்மாா்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினாா். இதேபோல் புதூா் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற விழாவில்,100க்கும் மேற்பட்ட தாய்மாா்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சிகளில், குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா்கள் தாஜுநிசா பேகம், திலகவதி, வட்டார மருத்துவா்கள் இன்பராஜ், விபிகா, திமுக ஒன்றிய செயலா் அன்புராஜன், பேரூா் செயலா் இரா.வேலுச்சாமி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் நடராஜன், ஞானகுருசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.