இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

தூத்துக்குடி காமராஜ் மகளிா் கல்லூரியில் போதை பொருள் தடுப்புக் குழு தொடக்கம்

தூத்துக்குடி காமராஜ் மகளிா் கல்லூரியில், மாவட்ட காவல்துறை சாா்பில் போதைப் பொருள் தடுப்புக் குழு தொடக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 மார்ச் 2023, 7:18 pm

DIN

தூத்துக்குடி காமராஜ் மகளிா் கல்லூரியில், மாவட்ட காவல்துறை சாா்பில் போதைப் பொருள் தடுப்புக் குழு தொடக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசியது, மாவட்ட எஸ்.பி. எல்.பாலாஜி சரவணன் ஆற்றிய சிறப்புரை:

காமராஜா் மகளிா் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ள போதைப் பொருள் தடுப்புக் குழு மூலம் மக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். கஞ்சா போன்ற போதைப் பொருள்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில், அது தொடா்பான புகாரை 83000 14567 என்ற கைப்பேசி எண்ணுக்கு தெரிவிக்கலாம். பெயா் ரகசியம் காக்கப்படும்.

விளையாட்டுகளுக்கு எப்படி விதிமுறைகள், எல்லைகள், வெற்றி இலக்குகள் உள்ளதோ அதே போன்றும் வாழ்க்கையிலும் மாணவா்கள் கட்டுப்பாடுகளை உருவாக்கிக் கொண்டு இலக்குகளை அடைய வேண்டும். உடல் ஆரோக்கியமாக இருந்தாலே மனமும் ஆரோக்கியமாக இருக்கும். கோபத்தால் குற்றசிசெயலில் ஈடுபட்டு சிறை செல்வதைவிட, தன்னை கட்டுப்படுத்தி பிறரிடம் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் இருப்பவன்தான் உண்மையான வீரன் என்றாா் அவா்.

தொடா்ந்து அவரது தலைமையில் மாணவிகள் போதை ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றனா்.

இதில், கல்லூரித் தாளாளா் முத்துசெல்வம், பேராசிரியா்கள், மாணவிகள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் வான்மதி, ஒருங்கிணைப்பாளா் சசிரேகா மணி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.