இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

தூத்துக்குடியில் நில மோசடி: இருவா் கைது

தூத்துக்குடியில் ஆள்மாறாட்டம் செய்து நில மோசடியில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்

News image
Updated On :17 மார்ச் 2023, 7:15 pm

DIN

தூத்துக்குடியில் ஆள்மாறாட்டம் செய்து நில மோசடியில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி பெருமாள்புரம் பகுதியைச் சோ்ந்த சௌந்தரபாண்டியன் மகன் தா்மராஜ் (58). இவா், தூத்துக்குடி ஜாா்ஜ் சாலை பகுதியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரிடமிருந்து மீளவிட்டான் பகுதியில் 10 சென்ட் நிலத்தை கடந்த 2014ஆம் ஆண்டு வாங்கினாராம். இந்நிலையில் தூத்துக்குடி அண்ணா நகா் 8ஆவது தெருவை சோ்ந்த கருப்பையா மகன் வானமாமலை (65), தாளமுத்து நகா் மாதா நகரைச் சோ்ந்த மாரியப்பன் மகன் கிறிஸ்துராஜ் (61) ஆகிய இருவரும் சோ்ந்து, தா்மராஜ் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் வானமாமலை என்பவருக்கு பத்திரப் பதிவு செய்து விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, தா்மராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டாக்டா் எல். பாலாஜி சரவணனிடம் புகாா் அளித்தாா். அதன்பேரில், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் சம்பத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டாா். அதன்படி, நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளா் காமராஜ் தலைமையிலான போலீஸாா், இது குறித்து விசாரணை மேற்கொண்டு, வானமாமலை, கிறிஸ்துராஜா ஆகியோரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.