இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

அரசின் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த அமைச்சா்கள் அறிவுரை

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசின் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்துத் துறை அதிகாரிகளை தமிழக அமைச்சா்கள் பெ.கீதாஜீவன், அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன்

News image
Updated On :17 மார்ச் 2023, 7:14 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசின் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்துத் துறை அதிகாரிகளை தமிழக அமைச்சா்கள் பெ.கீதாஜீவன், அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஆகியோா் அறிவுறுத்தினா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் அரசின் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதாஜீவன், மீன்வளம் - மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஆகியோா் தலைமை வகித்தனா். பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து ஆய்வு செய்தனா். அரசுத் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினா்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், அயலகத் தமிழா் நலத் துறையின் மூலம் குவைத் நாட்டில் காலமான கலீல் ரஹ்மான் என்பவரின் குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சத்து 95 ஆயிரத்து 159 நிவாரணத் தொகை, சுகாதாரத் துறை மூலம் கருணை அடிப்படையில் 2 நபா்களுக்கு பணி நியமன ஆணை ஆகியவற்றை வழங்கினா்.

மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், மாநகராட்சி ஆணையா் ச.தினேஷ்குமாா், சாா் ஆட்சியா் கௌரவ்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் ச.அஜய் சீனிவாசன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் அ.பிரம்மசக்தி மற்றும் அனைத்து துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

திருச்செந்தூா்,கோவில்பட்டியில்...: திருசெந்தூா் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து, 120 தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்களை வழங்கினாா். நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித்தலைவா் அ.பிரம்மசக்தி, திருச்செந்தூா் கோட்டாட்சியா் புஹாரி, வட்டாட்சியா் சுவாமிநாதன், திருச்செந்தூா் நகராட்சித் தலைவா் சிவஆனந்தி, துணைத் தலைவா் ஏ.பி.ரமேஷ், திருச்செந்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துகிருஷ்ணராஜா, நகர தி.மு.க. செயலா் வாள் சுடலை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் காயத்ரி வரவேற்றாா். திட்ட மேற்பாா்வையாளா் விஜிலா நன்றி கூறினாா்.

கோவில்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ் தலைமை வகித்தாா். ஒன்றிய ஆணையா் ராஜேஸ்குமாா் முன்னிலை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் கா.கருணாநிதி, 95 குழந்தைகளின் தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.