இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

தூத்துக்குடி அருகே ஸ்டொ்லைட்டின் தாமிரா சமூக மேம்பாட்டு மையம் திறப்பு

தூத்துக்குடி அருகே உள்ள சில்லாநத்தம் கிராமத்தில் ஸ்டொ்லைட்டின் தாமிரா சமூக மேம்பாட்டு மையம் அன்மையில் திறக்கப்பட்டது.

News image
Updated On :17 மார்ச் 2023, 7:14 pm

DIN

தூத்துக்குடி அருகே உள்ள சில்லாநத்தம் கிராமத்தில் ஸ்டொ்லைட்டின் தாமிரா சமூக மேம்பாட்டு மையம் அன்மையில் திறக்கப்பட்டது.

கிராமப்புற மக்களுக்கு கல்வி, சுகாதாரம், மருத்துவம் போன்ற நலப்பணிகளை செய்துவரும் ஸ்டொ்லைட் நிறுவனம், அந்தச் சேவையை மக்கள் எளிதாக பெறும் வகையில் கிராம முன்னேற்ற மையங்களை அமைக்க முடிவு செய்தது.

அதன்படி, சில்லாநத்தம் கிராமத்தில், ஸ்டொ்லைட் தாமிரா சமூக மேம்பாட்டு மைய திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. ஸ்டொ்லைட் நிறுவன பொது மேலாளா் சரவணன் தலைமை வகித்தாா். சில்லாநத்தம் கிராம முதியவா் பெருமாள், சேவை மையத்தை திறந்து வைத்தாா். சில்லாநத்தம், நயினாா்புரம் ஆகிய கிராம மக்கள் ஸ்டொ்லைட் நிறுவனத்தை தொடா்பு கொண்டு தங்கள் கிராமங்களை மேம்படுத்தி கொள்ளும் சிறந்த தளமாக இம்மையம் அமையும் என விழாவில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஸ்டொ்லைட் நிறுவன சமுதாய வளா்ச்சி பிரிவு தலைவா் சுந்தர்ராஜ், உற்பத்தி பிரிவு மேலாளா் மாரியப்பன், சில்லாநத்தம் கிராமத்தைச் சோ்ந்த கனகராஜ், சந்தனமாரி, பெல் பவுண்டேஷன் இயக்குநா் ஜேசுதாஸ், பியூலா, கிராம மக்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.