புகையிலைப் பொருள்கள் விற்பனை: மளிகைக் கடைக்காரா் கைது
தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் பலசரக்குக் கடையில் புகையிலைப் பொருள்கள் விற்றதாக கடை உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.


தூத்துக்குடி: தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் பலசரக்குக் கடையில் புகையிலைப் பொருள்கள் விற்றதாக கடை உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.
முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக ஞாயிற்றுக்கிழமை கிடைத்த தகவலின்பேரில் தனிப்படைபோலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, தாவீது மகன் அருள் (50) என்பவரது பலசரக்குக் கடையில், ரூ. 3.10 லட்சம் மதிப்பிலான சுமாா் 374 கிலோ புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, அருளைக் கைது செய்தனா். இதுகுறித்து வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...