தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகக்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 300 ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு திருமாங்கல்ய தங்கம், நிதி உதவி ஆகியவை வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி தலைமை வகித்தாா். சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கீதா ஜீவன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, 300 ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு ரூ.1 கோடியே 37 லட்சத்து 76ஆயிரம் மதிப்பிலான திருமாங்கல்ய தங்கம், ரூ.1 கோடியே 25 ஆயிரம் திருமண நிதி உதவியை வழங்கினாா். அப்போது, அவா் கூறியது:
ஈ.வெ.ரா. மணியம்மை நினைவு விதவை மகள் திருமண நிதியுதவி திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதியுதவி திட்டம், டாக்டா் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதியுதவி திட்டம், டாக்டா் தா்மாம்பாள் நினைவு விதவை மறுமண திருமண நிதியுதவி திட்டம் ஆகிய நான்கு திருமண நிதியுதவி திட்டத்தின்கீழ் 2019-2023 ஆண்டு வரை உள்ள நிதியை தமிழக முதல்வா் ஒதுக்கீடு செய்துள்ளாா். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் முதற்கட்டமாக 300 ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கப்படுகிறது.
மகளிா் உரிமைத் திட்டத்தில் விடுபட்ட தகுதியுள்ள பெண்கள் மேல்முறையீடு செய்தால் அவா்களுக்கும் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் (பொறுப்பு), தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் வீரபுத்திரன், மாவட்ட சமூக நல அலுவலா் (முழு கூடுதல் பொறுப்பு) காயத்ரி, அரசு அலுவலா்கள், பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாத்தூரில் பலத்த மழை

தமிழகத்தில் பலமுனைப் போட்டி இல்லை: இரா. முத்தரசன்

வேட்பாளரை மாற்ற மகாத்மா காந்தி சிலையிடம் முறையிட்ட காங்கிரஸ் கட்சியினா்

பெருந்துறை அதிமுக வேட்பாளா் காரை சோதனையிட்ட தோ்தல் பறக்கும்படையினா்
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


